ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி வெளியேறியது ஏன்? காரணம் இதுதானா? வெளிவந்த தகவல்

ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி வெளியேறியது ஏன்? காரணம் இதுதானா? வெளிவந்த தகவல்


தலைவர் 173

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகிய இருவரும் பல ஆண்டுகள் கழித்து இணைந்துள்ள படம் தலைவர் 173.

கமல் ஹாசன் இப்படத்தை தயாரிக்க ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க சுந்தர் சி இப்படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர்.

ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி வெளியேறியது ஏன்? காரணம் இதுதானா? வெளிவந்த தகவல் | Reason Behind Sundar C Out From Thalaivar 173

இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தாலும், அது சில நாட்களுக்கு மட்டுமே நீடித்தது.

ஏனென்றால், நேற்று தலைவர் 173 படத்திலிருந்து தான் விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி அறிவித்தார். ஆனால், இதற்கு என்ன காரணம் என தெரியாமல் இருந்தது.

சுந்தர் சி வெளியேற காரணம்



இந்த நிலையில், இயக்குநர் சுந்தர் சி ஜாலியான கதையின் ஒன்லைன் ரஜினியிடம் கூறியுள்ளாராம். ஆனால், ரஜினி அதில் மகிழ்ச்சியடையவில்லை. ஆரம்பத்தில் இந்த கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும், மாஸ் எலிமெண்ட்ஸ் இருக்கும் கதையை அவர் விரும்பியுள்ளார். ஸ்கிரிப்ட்டில் மாற்றங்களை கூறியுள்ளார்.

ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி வெளியேறியது ஏன்? காரணம் இதுதானா? வெளிவந்த தகவல் | Reason Behind Sundar C Out From Thalaivar 173

ஆனால், தான் அதற்கு ஏற்ற ஆள் இல்லை என உணர்ந்து இப்படத்திலிருந்து வெளியேற சுந்தர் சி முடிவு செய்துவிட்டாராம். ஆனால் அவரை மீண்டும் அழைத்து வர முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது என தகவல் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *