ரசிகர்கள் எதிர்பார்த்த அனுஷ்காவின் காதி பட ரிலீஸ், மீண்டும் ஒத்திவைப்பு.. எப்போது தெரியுமா?

அனுஷ்கா ஷெட்டி
ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை ராஜ்ஜியம் செய்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. திறமை, அழகு என அனைத்தும் பொருந்திய நடிகையாக வலம் வந்தவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் அருந்ததி.
அதன் பின், மிகவும் கவனிக்கப்படும் நடிகையாக இருந்த அனுஷ்கா பாகுபலி படத்தில் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் இடம் பெற்றார்.
தற்போது, க்ரிஷ் ஜகராளமுடி இயக்கத்தில் உருவாகி வரும் ’காட்டி’ படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோயினாக சோலோவாக களமிறங்கியுள்ளார் அனுஷ்கா.
இப்படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
மீண்டும் ஒத்திவைப்பு
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், ஒரு சில காரணத்தால் தற்போது படம் ஜூலை 11-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.