முடி வளர்ச்சியை முழங்கால் வரை அதிகரிக்க உதவும் மூலிகை எண்ணெய்: எப்படி தயாரிப்பது?

முடி வளர்ச்சியை முழங்கால் வரை அதிகரிக்க உதவும் மூலிகை எண்ணெய்: எப்படி தயாரிப்பது?


ஆண், பெண் என அனைவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.



இயற்கை முறையில் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் மூலிகை எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.   

தேவையான பொருட்கள்



  • கறிவேப்பிலை- 2 கைப்பிடி

  • நெல்லிக்காய்- 2
  • வெந்தயம்- 1 ஸ்பூன்

  • கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்

  • கற்றாழை- 1 துண்டு

  • தேங்காய் எண்ணெய்- ½ லிட்டர்

  • விளக்கெண்ணெய்- 1 ஸ்பூன்



தயாரிக்கும் முறை



முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கழுவி சுத்தம் செய்து வைத்த கறிவேப்பிலை, நறுக்கிய நெல்லிக்காய், வெந்தயம், கருஞ்சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.


பின் ஒரு இரும்பு வாணலில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.

முடி வளர்ச்சியை முழங்கால் வரை அதிகரிக்க உதவும் மூலிகை எண்ணெய்: எப்படி தயாரிப்பது? | Homemade Herbal Hair Oil For Hair Growth In Tamil



அடுத்து இதில் அரைத்த விழுது, நறுக்கிய கற்றாழை சேர்த்து மிதமான தீயில் வைத்து 20 நிமிடங்கள் நன்கு கொதிக்கவைக்கவும்.



எண்ணெய் நன்கு கொதித்து நிறம் மாறி வந்ததும் இதை ஒரு நாள் இரவு முழுக்க அப்படியே வைக்கவும்.


மறுநாள் காலையில் இந்த எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.

இதனைத்தொடர்ந்து இந்த எண்ணெயை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.



அதன்பின் மென்மையான ஷாம்பு கொண்டு வெதுவெதுப்பான நீரில் அலசிக்கொள்ளலாம்.


இந்த மூலிகை எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி வலுவாகவும் நீளமாகவும் வளரும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *