முடி அதிகமாக கொட்டுகிறதா? வெந்தயத்தை இப்படி பயன்படுத்தி பாருங்கள்.. பலன் தரும்

முடி கொட்டுவது என்பது இன்றைய காலத்தில் பலரையும் தொந்தரவு செய்யும் பிரச்சனையாக உள்ளது. இதை மாற்ற பல வைத்தியங்களை பலரும் முயற்சித்து வருகின்றனர்.
முடி போன்றவை வளர்ச்சிக்கு பயன்படும் பொருட்களில் வெந்தயமும் ஒன்று. பல கூந்தல் பிரச்சனைகளுக்கு வெந்தயம் ஒரு நல்ல தீர்வாக அறியப்படுகிறது.
வெந்தய விதையில் உள்ள அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
அந்தவகையில் முடி வளர்ச்சிக்கு வெந்தய விதைகளை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
முறை 1
- முதலில் வெந்தய விதைகளை நன்கு ஊற வைக்கவும்.
-
பிறகு நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். - இதனுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து தலைமுடியில் தடவவும்.
-
அரை மணி நேரம் கழித்து கழுவவும். - இவ்வாறு செய்வதால் முடி உதிர்வதைத் தடுப்பது மட்டுமின்றி கூந்தல் பளபளப்பாகவும் இருக்கும்.
முறை 2
-
வெந்தயம் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. - வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் சூடாக்கவும்.
-
வெந்தயத்தை சிவப்பு நிறமாக மாறும் வரை சூடாக்க வேண்டும். - இந்த எண்ணெயை வெதுவெதுப்பான சூட்டில் முடியில் தடவி மசாஜ் செய்யலாம்.
-
இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
முறை 3
-
வெந்தய விதை மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை கலந்து தலைமுடியில் தடவலாம். -
சிறிது நேரம் கழித்து கழுவவும். -
இதனால் முடியின் பொலிவும் அதிகரிக்கும்.
முறை 4
-
ஊறவைத்த வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை கலந்து தலைமுடியில் தடவவும். -
இது முடி வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமின்றி, கூந்தலுக்கு கருப்பு நிறத்தையும் கொடுக்க உதவுகிறது. -
முன்கூட்டிய முதுமையைத் தவிர்க்க இது ஒரு நல்ல தீர்வாகும்.
முறை 5
-
தயிரில் ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தலைமுடியில் தடவினால் முடி வளர்ச்சி மற்றும் முடி உதிர்தல் போன்றவற்றுக்கு நல்ல நிவாரணியாகும். -
பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கும் இது நல்ல மருந்தாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |