மீனா செய்த காரியத்தால் அவர் மீது சந்தேகப்பட்டு செந்தில் செய்த காரியம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

குடும்பமாக உட்கார்ந்து எந்த ஒரு முக சுளிப்பும் இல்லாமல் பார்க்கக் கூடிய சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்.
கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடுகளில் ரசிகர்களால் வரவேற்கப்பட்ட காட்சி முத்துவேல்-கதிர் காட்சிகள் தான். மாமனார்-மருமகன் இடம்பெறும் காட்சிகள் இன்னும் அதிகமாக இடம்பெற செய்யுங்கள் என இயக்குனரிடம் ரசிகர்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர்.
இந்த வார புரொமோவில், மீனா, மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வீட்டில் இருக்கும் அனைவரிடமும் கூறுகிறார் சரவணன் சொன்ன விஷயத்தையும் கூற அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த கதிர் கொஞ்சம் பதட்டமாக காணப்படுகிறார். அவரைப்பார்த்த ராஜி என்ன விஷயம் என கேட்க, ஒன்றும் இல்லை நாளை திருச்சி தனியாக செல்ல வேண்டும், நானே கார் ஓட்டிச் செல்கிறேன் அதான் என கூறி ஏதோ சமாளிக்கிறார்.
அடுத்து முத்துவேல், ஒரு வேலைக்காக திருச்சி செல்கிறேன் என கூறி வெளியே வருகிறார், சக்திவேல் நானும் வருகிறேன் என சொல்ல வேண்டாம் என கூறிவிட்டு கிளம்புகிறார். அந்த நேரம் கதிரும் வெளியே கிளம்ப, இவர்கள் இருவரும் நமக்கு தெரியாமல் ஏதோ பிளான் செய்கிறார்களா என சக்திவேல் சந்தேகப்படுகிறார்.
இந்த காட்சிகளுக்கு நடுவில், மீனா வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கும் போது மயில் போன் செய்து சரவணன் வந்து பேசியதையும் தான் அமைதியாக வந்த விஷயத்தையும் கூறுகிறார். அப்போது செந்தில் வர திடீரென போனை கட் செய்துவிடுகிறார் மீனா.
அக்காவிடம் பேசியதை கவனித்திருப்பாரா என மீனா பதற்றம் அடைய செந்திலுக்கு சந்தேகம் வருகிறது. இதனால் மீனா சென்றவுடன் அவரது போனை எடுத்து பார்க்கிறார், அதில் ஷ்யாமலா என இருக்கிறது.
இவரிடம் தானே பேசினாள் அதற்கு ஏன் பதட்டமாக இருக்கிறாள் என சந்தேகப்படுகிறார்.






