மீனாவால் விஜயாவிற்கு வந்த ஷாக்கிங் நியூஸ், சீதாவை ஒரு வழி செய்த அருண்… சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை
விஜய்யில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் கடைசி எபிசோடில், அண்ணாமலையின் 60வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விஜயா, மனோஜ், ரவி 3 பேரும் அண்ணாமலை பிறந்தநாளை மறந்தாலும் முத்து மறக்காமல் தனது அப்பாவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதே சந்தோஷத்தில் முத்து தனது புதிய வண்டிக்கு பூஜை போட வேண்டும் என கூற மொத்த குடும்பமும் கோவில் செல்கிறார்கள்.
அங்கு வழக்கம் போல் விஜயா முத்துவை மட்டம்தட்டி பேசுகிறார். வண்டிக்கு பூஜை போட்டதும் சீதா கோவில் சுற்றி வரும் போது அவரது தாலியை யாரோ திருடி விடுகிறார்கள்.
எபிசோட்
சீதா தாலியை திருடி சென்றவரை மீனா துரத்தி செல்ல பின் அவர் ஜோசியம் சொன்னவர் என்றதும் அவர் ஷாக் ஆகிறார்.
இந்த விஷயத்தை குடும்பத்தினரிடம் கூற அனைவரும் ஷாக் ஆகிறார்கள், ஆனால் விஜயா அதை நம்பவே இல்லை. மீனா தான் பொய் சொல்கிறார் அவர் பெரிய ஜோசியர் என விஜயா கூறுகிறார்.
பின் அந்த நபர் போலியானவர் என்பதை நிரூபித்தால் மீனாவை வீட்டிற்கு அழைக்க வேண்டும் என முத்து சவால் விட விஜயா அப்படி நடந்தால் பார்க்கலாம் என கூறிவிட்டு செல்கிறார்.
வீட்டிற்கு வந்த சீதா, கோவிலில் நடந்த விஷயத்தை அருணிடம் கூற அவர் கோபத்தில் பேசுகிறார். என் அம்மாவும் இல்லை, என் அம்மா ஆசையாக போட்ட தாலி செயினையும் தொலைத்து விட்டாய், தாலி இல்லாமல் வீட்டிற்கு வராதே என அடித்து துரத்திவிடுகிறார்.
முத்து-மீனா அந்த திருடியை கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளனர்.






