மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
அட ஒரு பிரச்சனையாக கதையில் காட்டுங்கப்பா என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு எல்லா சீரியல்களிலும் ஒரே பிரச்சனையாக செல்கிறது.
இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன்-கோமதி பேசிக்கொள்வது இல்லை, காந்திமதி மகன் வீட்டில் சண்டைப்போட்டுக்கொண்டு மகள் வீட்டிற்கு வந்துவிட்டார்.
குமாரு திருமணம் நின்றுவிட்டது. மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் யாருக்கும் தெரியாமல் அப்படியே உள்ளது, அவரும் தனியாக வாழ முடிவு எடுத்துவிட்டார். மீனாவும் செந்தில் அவ்வளவு சொல்லியும் மயிலுக்கு உதவிகள் செய்த வண்ணம் உள்ளார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், மீனா தனது தோழியுடன் சேர்ந்து மயில் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார். மயில் விஷயத்தில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றால் இந்த விரிசல் பெரிதாகிவிடுமோ என்ற பயம் உள்ளது.
இருந்தாலும் மயில் குழந்தை பற்றியாவது தெரிய வேண்டும் என நினைக்கிறேன். பின் அவர் நீ பேசுவதை உன் மாமியார் கேட்பார்கள் தானே அவரிடம் சொல் என கூற மீனாவும் யோசிக்கிறார்.
பின் வீட்டிற்கு வந்தவர் கோமதி, காந்திமதி, ராஜி, அரசி என 4 பேரும் ஒன்றாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்து அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது பேச்சு வாக்கில் மயில் தான் மூத்த மருமகள் அவர் தான் முதலில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என கூற அனைவருமே ஷாக் ஆகிறார்கள்.
கோமதி இன்னொரு முறை அவள் பெயரை கூறாதே என கோபப்பட, அரசி அவர் பெயரை கூறாதீர்கள் எனக்கு போலீஸ் நிலையம் சென்றது தான் நியாபகம் வருகிறது என்கிறார். அலுவலகத்தில் செந்தில் தனது மாமனார் பேச்சைக் கேட்டு லஞ்சம் வாங்கி துணிகிறார்.
அடுத்து என்ன நடக்கப்போகிறதோ நாளைய எபிசோடில் காண்போம்.






