மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு அதை செய்தேன்.. சூப்பர் ஸ்டார் சொன்ன ஷாக்கிங் தகவல்

அமீர்கான்
60வது வயதிலும் பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அமீர்கான். இவர் நடிப்பில் கஜினி, லகான், தங்கல், பி.கே என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
மேலும், தற்போது ரஜினியின் கூலி திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.
அதை செய்தேன்
இந்நிலையில், தனது முதல் மனைவி குறித்து அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” என் முதல் மனைவி ரீனா தத்தா என்னை விட்டு பிரிவதாக கூறி வெளியேறிய அன்று ஒரு பாட்டில் மது அருந்தினேன். அதன் பின் தொடர்ந்து ஒன்றரை வருடம் தினமும் குடித்தேன்.
என்னால் தூங்கவே முடியவில்லை. அதிக மது குடித்ததால் சுயநினைவை இழந்தேன். என் உயிரை நானே மாய்த்துக் கொள்ள முயற்சி செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.