மதுரை பாணியில் காரசாரமான சின்ன வெங்காய தக்காளி சட்னி… எப்படி செய்வது?

மதுரை பாணியில் காரசாரமான சின்ன வெங்காய தக்காளி சட்னி… எப்படி செய்வது?

பொதுவாகவே தென்னிந்திய உணவுகள் உலகப்புகழ் பெற்றவை. குறிப்பாக காரசாரமான உணவுகளுக்கு பெயர் பெற்ற இடம் என்றால், அது நிச்சயம் மதுரை தான். 

மதுரை பாணயில் அனைவரும் மிச்சம் இன்றி சாப்பிடும் வகையில் காரசாரமான சின்னவெங்காய சட்னியை அசத்தல் சுவையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். இந்த சட்னி இட்லி, சோசை, பூரி மற்றும் சாதத்துக்கு கூட சூப்பராக பெருந்தும்.

மதுரை பாணியில் காரசாரமான சின்ன வெங்காய தக்காளி சட்னி... எப்படி செய்வது? | Madurai Style Tomato Onion Chutney Recipe

தேவையானப் பொருட்கள்

நன்கு பழுத்த தக்காளி – 2 

சின்ன வெங்காயம் – 10முதல் 15 

துருவிய தேங்காய் – 2 தே.கரண்டி 

எண்ணெய் – 1 தே.கரண்டி 

கருப்பு உளுந்தம் பருப்பு – 1 கரண்டி

வர மிளகாய் – 5 

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

உப்பு – தேவையான அளவு

மதுரை பாணியில் காரசாரமான சின்ன வெங்காய தக்காளி சட்னி... எப்படி செய்வது? | Madurai Style Tomato Onion Chutney Recipe

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, கருப்பு உளுந்தம் பருப்பை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.( வெள்ளை உளுத்தும் பயன்படுத்தலாம்)

பின்னர் அதே எண்ணெயில்  கடலைப் பருப்பு சேர்த்து நன்றாக வறுத்து அதனையும் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். 

மதுரை பாணியில் காரசாரமான சின்ன வெங்காய தக்காளி சட்னி... எப்படி செய்வது? | Madurai Style Tomato Onion Chutney Recipe

அதனையடுத்து அதே பாத்திரத்தில், வர மிளகாயை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். 

அது போல் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையையும்  சேர்த்து தனியாக எடுத்து வைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி பாத்திரத்தில் சேர்த்து பொன்னிறமாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.

மதுரை பாணியில் காரசாரமான சின்ன வெங்காய தக்காளி சட்னி... எப்படி செய்வது? | Madurai Style Tomato Onion Chutney Recipe

அவை அனைத்தையும் நன்றாக ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு  அதனுடன் துருவிய தேங்காயையும் சேர்த்து கொரகொரப்பான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். 

அதனை தாளிக்க வேண்டியதே கிமையாது. அரைத்து எடுத்தால் அவ்வளவு தான் சூப்பரான மதுரை சின்ன வெங்காய தக்காளி சட்னி தயார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *