மங்காத்தா படத்தில் அர்ஜுன் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்.. டாப் ஹீரோ

மங்காத்தா
அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மங்காத்தா. இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து அர்ஜுன் நடித்திருந்தார்.
மேலும் திரிஷா, ஆண்ட்ரியா, வைபவ், மகத், பிரேம்ஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். மாபெரும் வெற்றியடைந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.
இப்படத்தில் பிரித்வி கதாபாத்திரத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்திருந்தார்.
அட இவரா?
இந்நிலையில், இப்படத்தில் அர்ஜுன் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது, தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா தானாம்.
அவருடைய கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனாவால் நடிக்கமுடியாமல் போனதாம். இதனால் அர்ஜுனை தேர்ந்தெடுத்தாராம் இயக்குநர் வெங்கட் பிரபு.