மகேஷ் பாபுவின் 50வது பிறந்தநாள்.. அவருடைய மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

மகேஷ் பாபு
தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் மகேஷ் பாபு. வாரிசு நடிகரான இவர் தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார்.
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மகேஷ் பாபு 1999ல் வெளிவந்த ராஜ குமாருடு படம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார்.
இவர் நடிப்பில் கடைசியாக குண்டூர் காரம் படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் தனது 29வது படத்தில் நடித்து வருகிறார். மகேஷ் பாபு நடிகை நம்ரதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
சொத்து மதிப்பு
50வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் மகேஷ் பாபுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 300 கோடிக்கும் மேல் இருக்கும். இவருடைய திரைப்பட சம்பளம் ரூ. 70 கோடி முதல் ரூ. 100 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விளம்பரங்களில் நடிக்க ரூ. 15 கோடி முதல் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
ஹைதராபாத்தில் இவருக்கு சொந்தமாக ஆடம்பர வீடு உள்ளது. இதனுடைய மதிப்பு ரூ. 30 கோடி ஆகும்.
இதுவே இவருடைய சொத்து மதிப்பு ஆகும். ஆனால், இவை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.