மகாநதி சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று மகாநதி. பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் இயக்குனர் பிரவீன் பெனட் தான் இந்த தொடரை இயக்கி வருகிறார்.
இந்த சீரியலில் விஜய் – காவேரி ஆகியோரின் ரொமான்ஸ் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
விலகிய ஆதிரை
மகாநதி சீரியலில் யமுனாவாக நடித்து வந்த நடிகை ஆதிரை தற்போது திடீரென விலகி இருக்கிறார்.
இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு பதிலாக வரபோதும் புது யமுனா யார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். யார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.