மகாநதி, அய்யனார் துணை என ஹிட் சீரியல்களின் நேரம் மாற்றம்… முழு விவரம்

விஜய் டிவி
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவி புத்தம் புதியதாக நிறைய ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.
சமீபத்தில் சூப்பர் ஹிட் ஷோவான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புத்தம் புதிக கான்செப்டுடன் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது, புதிய கான்செப்டில் தொடங்கியுள்ள இந்த ஷோ எப்படி போகப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களை தாண்டி சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்களை பிடித்துவிட்டார்கள். தற்போது இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.
நேரம் மாற்றம்
அதாவது வரும் திங்கள் முதல் 3 சீரியல்களின் நேரம் மாற்றத்தின் தகவல் தான் வந்துள்ளது.
இனி மகாநதி சீரியல் 7 முதுல் 7.30 மணிக்கும், 7.30 முதல் 8.15 வரை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும், 8.15 முதல் 9 மணிவரை அய்யனார் துணை சீரியலும் ஒளிபரப்பாக உள்ளதாம்.