மகாநடிகை கிராண்ட் பினாலே.. வெற்றி மகுடத்தை வென்ற ஹேமதி

மகாநடிகை கிராண்ட் பினாலே.. வெற்றி மகுடத்தை வென்ற ஹேமதி


ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் ஒவ்வொன்றிற்கும் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

அப்படியான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் மகாநடிகை. வாரந்தோறும் ஞாயிறு இரவு 8:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. தேசிய விருது பெற்ற நடிகை சரிதா, நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட விஜய் ஆண்டனி மற்றும் பிரபல நடிகையான அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க ஆர்.ஜே விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.


போட்டியாளர்கள் தங்களது நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தும் மிகப்பெரிய மேடையாக இந்த மகாநடிகை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் பிப்ரவரி 2-ம் தேதி அன்று கோலாகலமாக நடைபெற்றது. ஹேமதி, ஜாப்னா உட்பட 5 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இருந்தனர். ஒவ்வொரு ரவுண்டிலும் நடிப்பின் மூலமாக நடுவர்களை பார்வையாளர்களையும் பிரம்மிக்க வைத்த போட்டியாளர்கள் இறுதி போட்டியில் கடுமையாக போட்டி போட்டனர்.


போட்டியின் இறுதியில் மக்களின் ஓட்டுகள் மற்றும் நடுவர்களை மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் பிடித்து டைட்டிலை வென்றார் பலரின் பேவரைட் போட்டியாளரான ஹேமதி. அவருக்கு அடுத்தப்படியாக ஜாப்னா ரன்னராக வெற்றி பெற்றுள்ளார்.

மகாநடிகை கிராண்ட் பினாலே.. வெற்றி மகுடத்தை வென்ற ஹேமதி | Mahanadigai Grand Finale Hemathi Wins Title

புதுமுக நடிகைக்கான தேடலாக ஒளிபரப்பாக தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்காக ஜீ தமிழ் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆடிஷன் நடத்தி இறுதியாக 10 போட்டியாளர்களை தேர்வு செய்து 10 பயிற்சியாளர்களை கொண்டு அவர்களுக்கு பயிற்சியும் அளித்து இந்த போட்டியை சிறப்பாக கொண்டு சென்றது பாராட்டுதலுக்குரிய ஒன்றாகும்.


மகாநடிகை நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து வெகுவிரைவில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிகழ்ச்சியையும் ஆர்.ஜே விஜய் தொகுத்து வழங்க பாபா பாஸ்கர் மாஸ்டர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *