மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. பழிதீர்க்க வந்த தந்தை – நள்ளிரவில் நடந்த கொடூரம்!

மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. பழிதீர்க்க வந்த தந்தை – நள்ளிரவில் நடந்த கொடூரம்!


மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரைத் தந்தை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா

ஆந்திரா மாநிலம்,
அன்னமய்யா மாவட்டம் ஒபுலவாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சநேய பிரசாத் -சந்திரகலா தம்பதியினர் . இவர்களுக்கு2 வயதில் மகள்  உள்ளார் .கணவன் மனைவி இருவரும் குவைத்தில் வேலை செய்து வருகிறார். இதனால் மகளைத் தனது தாத்தா பாட்டியுடன் தங்கியுள்ளார்.

மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரைத் தந்தை கொன்ற சம்பவம்


இந்த நிலையில் விடுமுறைக்காகத் தனது அத்தை லட்சுமி வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது தூங்கிக் கொண்டிருக்கும் போது லட்சுமியின் மாமனார் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.இது குறித்து தனது அத்தையிடம் தெரித்துள்ளார். ஆனால் இதை யாரிடம் சொல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

மேலும் சிறுமியின் தாய் சந்திரகலாவை அழைத்து மகளை அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார்.

உடனே குவைத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த சந்திரகலா தனது மகளிடம் விசாரித்துள்ளார்.
அப்போது நடந்த விவரத்தைச் சொல்லியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரகலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 பாலியல் வன்கொடுமை

மேலும் காவல்துறையிடம் பணம் செலுத்தி அப்படியே அனுப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து சந்திரகலா தனது கணவரிடம் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த பிரசாத், யாரிடமும் சொல்லாமல் 4 நாள் விடுமுறையில் இந்தியா வந்துள்ளார்.

மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரைத் தந்தை கொன்ற சம்பவம்

சனிக்கிழமை இரவு  ஆஞ்சநேய பிரசாத்  வீட்டுக்குச் சென்று கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஆஞ்சநேயலுவை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு யாருக்கும் தெரியாமல் மீண்டும் குவைத்துக்கு சென்றுள்ளார்.

மேலும் கொலை செய்தது குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். விரைவில் இந்தியா திரும்பி போலீசில் சரணடைவதாகக் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *