ப்ரீ புக்கிங்கில் சாதனை படைக்கும் கூலி.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

கூலி
ரஜினிகாந்த் படம் வெளியாகிறது என்றால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸ் களைகட்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
அதுவும் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் சொல்லவே தேவையில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கூலி.
இப்படம் வருகிற 14ம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ப்ரீ புக்கிங்
கடந்த சில தினங்களுக்கு முன் கூலி திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் அனைத்து இடங்களிலும் ஓபன் ஆனது. இந்நிலையில், இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இப்படம் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
கண்டிப்பாக ரிலீஸுக்கு முன் ரூ. 100 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே வசூல் செய்து மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.