போதும் சார் போதும்.. நடிகர் நாணி குறித்து பேசிய கமல்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு

கமல் – நாணி
நடிகர் கமல் ஹாசனை முன்னோடியாக வைத்து சினிமாவில் களம்புகுந்தவர்கள் பலர் உள்ளனர். லோகேஷ் கனகராஜ், நடிகர் சூர்யா, கவுதம் மேனன், மணிகண்டன் என பலரையும் கூறலாம்.
அப்படி கமல் ஹாசனின் தீவிர ரசிகராக இருப்பவர் நடிகர் நாணி. தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நாணி இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஹிட் 3 திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
கமல் ஹாசன் குறித்து பல்வேறு இடங்களில் நடிகர் நாணி பேசியுள்ளார். அப்படி ஒரு முறை பேட்டி ஒன்றில், விருமாண்டி திரைப்படத்தில் நீதிமன்றம் காட்சியில் கமல் ஹாசன் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் நடிப்பு தன்னை வியக்க வைக்கிறது என நாணி பேசியிருந்தார். அது மிகவும் வைரலானது.
நாணி குறித்து பேசிய கமல்
இந்நிலையில், கமல் ஹாசன் சமீபத்தில் பேட்டி ஒன்றில், தனது நடிப்பு குறித்து நாணி குறிப்பிட்டு கூறியதை பற்றி பேசியுள்ளார். இதில் “நான் நாணி பெயரை குறிப்பிட்டதற்கு காரணம், அப்படிதான் சினிமா இருக்க வேண்டும். நன்றி நாணி என்று சொல்வதை விட நாணி என சொன்னதே போதும் அவருக்கு. அதுபோல் தான் நடிப்பும் இருக்க வேண்டும்” என பேசியிருந்தார்.
கமல் ஹாசன் தன்னை குறிப்பிட்டு பேசிய நிலையில், அதற்கு நாணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ‘போதும் சார் போதும்’ என ஹார்டிங் சிம்பிளுடன் தனது மகிழ்ச்சியை நாணி வெளிப்படுத்தியுள்ளார்.
Podhum sir. Podhum ♥️@ikamalhaasan
— Nani (@NameisNani) May 28, 2025