பேரனின் முதல் மைல்கல்.. வைரலாகும் ரஜினிகாந்தின் எமோஷ்னல் பதிவு

தனுஷ் – ஐஸ்வர்யா
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே விவாகரத்தை அறிவித்துவிட்டனர்.
அவ்வப்போது தனுஷ் அல்லது ஐஸ்வர்யா தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை நம்மால் காண முடிந்தது. தற்போது, தங்கள் மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவுக்காக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.
சென்னையில் இருக்கும் அமெரிக்கன் இன்டர்நேஷ்னல் ஸ்கூலில் தான் தனது பள்ளி படிப்பை யாத்ரா முடித்து இருக்கிறார். இதில், தனுஷ் ஐஸ்வர்யா மற்றும் மகன் மூவரும் இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலானது.
எமோஷ்னல் பதிவு
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பேரன் யாத்ராவை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “என் அன்புக்குரிய பேரனின் முதல் மைல்கல். வாழ்த்துகள் யாத்ரா கண்ணா” என்று தெரிவித்துள்ளார். தற்போது, இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.