பெரிய உதவி செய்த மீனாவை திட்டிதீர்த்த மயில், என்ன ஆச்சு… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ்-ரோஹினி விவாகரத்து பிரச்சனை என்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன்-மயில் விவாகரத்து பிரச்சனை பெரியதாக செல்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சரவணனிடம் கூற அவரோ இது யாருடைய குழந்தை என கேட்டு அவரை கஷ்டப்படுத்திவிட்டார்.
இதனால் மயில் இனி அவரிடம் எதுவும் பேச வேண்டாம், என் குழந்தையை நானே பார்த்துக் கொள்கிறேன் என மயில் முடிவு எடுத்துவிட்டார். ஆனால் மீனாவோ, மயில் விஷயத்தை கோமதியிடமாவது சொல்லிவிடலாம் என முயற்சி செய்துள்ளார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், கோமதியிடம் மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறி விடலாம் என மீனா அவரை கோவிலுக்கு அழைத்து வருகிறார்.
ஆனால் அந்த இடத்தில் மயிலின் அம்மா வர சம்பவம் வேறு மாதிரி ஆகிவிட்டது, அவர் கோமதியிடம் சண்டை போட மீனா மீது இப்போது மயில்-கோமதி கோபம் திரும்பிவிட்டது.
மயில் இனி இந்த விஷயத்தை மற்றவர்களிடம் கூறுவதாக என்னை மீண்டும் அசிங்கப்படுத்தாதே என கூற மீனா செம ஷாக் ஆகிறார்.
வீட்டில் காந்திமதி, பாண்டியனிடம் கோமதியுடன் சண்டையை முடித்துக்கொள்ளுங்கள் என கூற அவர் முடியாது என்று கூறிவிட்டு செல்கிறார்.
செந்தில்-மீனா இருவரும் சமைத்து சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருக்க மயில் அவருக்கு போன் செய்கிறார். கோவிலில் அப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்கிறார்.






