புற்றுநோய் சிகிச்சை.. நடிகர் சிவராஜ்குமார் உருக்கமான வீடியோ

கன்னட நடிகர் சிவராஜ்குமார் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான ஒருவர் தான். அதற்கு காரணம் அவர் ரஜினியின் ஜெயிலர் படத்தில் கெஸ்ட் ரோலில் அவர் நடித்து இருந்தார்.
அவர் அடுத்து விஜய்யின் தளபதி69 படத்திலும் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் உடல்நிலை காரணமாக நடிக்கவில்லை.
புற்றுநோய் சிகிச்சை
நடிகர் சிவராஜ்குமார் புற்றுநோய் சிகிச்சைக்காக சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று இருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை நடைபெற்றது.
அவர் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு தான் குணமாகிவிட்டதாக கூறி இருக்கிறார்.
அவர் மனைவி உடன் இருக்கும் உருக்கமான வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.