புகழ் நடிச்சா படம் ஓடாதா? உருக்கமாக பேசிய குக் வித் கோமாளி புகழ்

புகழ் நடிச்சா படம் ஓடாதா? உருக்கமாக பேசிய குக் வித் கோமாளி புகழ்


புகழ்

சின்னத்திரையில் இருந்து மக்கள் மத்தியில் பிரபலமான வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் பலர் உள்ளனர். சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ ஷங்கர், அறந்தாங்கி நிஷா என ஏராளமோர் பெயரை கூறலாம்.

புகழ் நடிச்சா படம் ஓடாதா? உருக்கமாக பேசிய குக் வித் கோமாளி புகழ் | Cwc Pugazh Talk About Negative Comments

அந்த வரிசையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது திறமையால் மக்களின் மனதில் இடம்பிடித்து இன்று வெள்ளித்திரையில் படங்கள் நடித்து வருகிறார் புகழ். அயோத்தி, August 16 1947 ஆகிய படங்களில் நடிகர் புகழ் சிறப்பாக நடித்திருந்தார்.

சமீபத்தில் இவர் ஹீரோவாக நடித்து Mr. Zoo Keeper எனும் படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகர் புகழ் அளித்த பேட்டி ஒன்றில் படுவைரலாகி வருகிறது.

உருக்கமாக பேசிய புகழ்



இதில் “ட்ரைலரோ, போட்டோவோ எது வந்தாலும், புகழ் இருக்கானா இந்த படம் ஓடாது. புகழ் இருக்கானா இந்த படம் ஜெயிக்காதுனு சொல்றாங்க. இதேபோல் தானே முன்னாடியும் நடிச்சிட்டு இருந்தான். வலிமை, எதற்கும் துணிந்தவன், சந்தானம் சார் கூட 2 படம், யானைனு நடித்தேன். இப்ப சமீபமாக தான் இந்த மாதிரி விஷயங்கள் நடக்குது. அதுவும் காரணம் இல்லாமல் நடக்குது.

புகழ் நடிச்சா படம் ஓடாதா? உருக்கமாக பேசிய குக் வித் கோமாளி புகழ் | Cwc Pugazh Talk About Negative Comments

இது எனக்கு மட்டுமில்ல எல்லா நடிகர்களுக்கும் இப்படித்தான் நடக்குது. இப்போ எதுவும் ஆர்கானிக் ஆக இல்லை. இப்படி சொன்னால் தான் நாம் வெளியே தெரிவோம் என ஒரு கூட்டம் அலைஞ்சிகிட்டு இருக்கு. நீங்க என்னை தனிப்பட்ட முறையில் பண்ணா பரவால்ல. ஆனா, என்னை அப்படி பண்றதுனால அந்த படத்தில் நடிச்சவங்க அத்தனை பேரும் பாதிக்கப்படுறாங்க. அதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு” என கூறியுள்ளார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *