பிக்பாஸ் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஜாக்குலின்: என்ன தெரியுமா?

பிக்பாஸ் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஜாக்குலின்: என்ன தெரியுமா?


தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.


இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.


பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

பிக்பாஸ் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஜாக்குலின்: என்ன தெரியுமா? | Jacquline Create New Record In Bb Tamil History

இந்நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு மாதங்கள் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில் கடந்த வாரம் ரஞ்சித் வெளியேறியுள்ளார்.



வீட்டில் தற்போது முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரஞ்சித், ராணவ், ஜெஃப்ரி, தீபக், அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், மஞ்சரி, செளந்தர்யா ஆகிய 12 பேர் உள்ளனர்.



பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் எவிக்‌ஷன் நடைபெறும் நிலையில் இதற்காக வாரத்தின் முதல் நாளில் நாமினேஷன் நடக்கும்.

பிக்பாஸ் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஜாக்குலின்: என்ன தெரியுமா? | Jacquline Create New Record In Bb Tamil History



அதில் போட்டியாளர்கள் தாங்கள் வெளியேற்ற விரும்பும் இரண்டு போட்டியாளர்களின் பெயரை முன் மொழிவார்கள்.



அதன்படி இதன்மூலம் பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளரான ஜாக்குலின் புது சாதனை ஒன்றை படைத்துள்ளார்.



அதாவது பிக்பாஸ் வரலாற்றில் தொடர்ச்சியாக 12 முறை நாமினேட் ஆன போட்டியாளர் என்கிற சாதனையை ஜாக்குலின் படைத்திருக்கிறார்.

பிக்பாஸ் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஜாக்குலின்: என்ன தெரியுமா? | Jacquline Create New Record In Bb Tamil History

இதற்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் பாவனி ரெட்டி இதேபோன்று தொடர்ச்சியாக 12 வாரம் நாமினேட் ஆகி இருந்தார்.

அந்த சாதனையை தற்போது ஜாக்குலின் சமன் செய்திருக்கிறார்.

அடுத்த வாரம் நாமினேட் ஆனால் தனி வரலாறை போட்டியாளர் ஜாக்குலின் படைத்துவிடுவார்.


குறிப்பாக இந்நிகழ்ச்சியில் ஜாக்குலின் இதுவரை ஒருமுறை கூட கேப்டன் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.       

அதேபோல் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக இந்தி பிக்பாஸில் 14வது சீசனில் கலந்துகொண்ட ரூபினா திலக் என்பவர் மொத்தமாக 15 வாரமும் நாமினேட் ஆகினாராம்.  

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *