பட்ஜெட் மற்றும் லாபம் எவ்வளவு தெரியுமா

கூலி
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
படத்தின் பிசினஸ்
இந்நிலையில், கூலி திரைப்படம் பிசினஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 355 கோடி. இதில் நடிகர்கள், நடிகைகளின் சம்பளம் மட்டுமே ரூ. 275 கோடி.
ரூ. 355 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை, ரூ. 530 கோடிக்கு சன் பிக்சர்ஸ் பிசினஸ் செய்துள்ளனர்.
திரையரங்க உரிமைகள், சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை என அனைத்தும் சேர்த்து ரூ. 530 கோடிக்கு கூலி படம் பிசினஸ் செய்யப்பட்டுள்ளது.
இதில் ரூ. 355 கோடி பட்ஜெட் செலவு போக, ரூ. 175 கோடி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு லாபம் கிடைத்துள்ளது.