நீ நான் காதல் தொடர்ந்து புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை வர்ஷினி சுரேஷ்.. என்ன தொடர் தெரியுமா?

நீ நான் காதல் தொடர்ந்து புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை வர்ஷினி சுரேஷ்.. என்ன தொடர் தெரியுமா?


நீ நான் காதல்

விஜய் டிவியில் இளசுகள் நடிக்க கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட தொடர் நீ நான் காதல்.

இஸ் பியார் கோ கியா நாம் தூன் என்ற ஹிந்தி தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பான இந்த தொடரில் வர்ஷினி சுரேஷ், பிரேம் ஜாக்கப், சாய் காயத்ரி, ஷங்கரேஷ் குமார் என பலர் நடித்திருந்தனர்.

384 எபிசோடுகளுடன் இந்த தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வந்தது ரசிகர்களுக்கு பெரும் வருத்தம் தான்.

நீ நான் காதல் தொடர்ந்து புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை வர்ஷினி சுரேஷ்.. என்ன தொடர் தெரியுமா? | Serial Actress Varshini Suresh New Project

புதிய தொடர்


தற்போது நீ நான் காதல் சீரியலில் அபி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த வர்ஷினி சுரேஷ் விஜய் டிவியில் புதிய தொடரில் கமிட்டாகியுள்ளார்.

Maguva O Maguva என்ற தொடரின் தமிழ் ரீமேக்கில் வர்ஷினி நாயகியாக நடிக்க பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ரேஷ்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் வீட்டுக்கு வீடு வாசற்படி சீரியல் புகழ் அவினாஷும் நடிக்க இருப்பதாக கமிட்டாகியுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *