நீங்க அப்போவே ஹீரோ.. ஜாக்குலின் எலிமினேஷன் பற்றி விஜய் சேதுபதி பைனலில் சொன்ன கருத்து

நீங்க அப்போவே ஹீரோ.. ஜாக்குலின் எலிமினேஷன் பற்றி விஜய் சேதுபதி பைனலில் சொன்ன கருத்து


பிக் பாஸ் 8ம் சீசன் பைனல் இன்று ஒளிபரப்பாகி வருகிறது. ஷோவில் முக்கிய போட்டியாளராக இருந்த ஜாக்குலின் சில தினங்கள் முன்பு நடந்த பணப்பெட்டி டாஸ்கில் தோற்று எலிமினேட் ஆகிவிட்டார்.

அவரை இன்று பைனலில் வரவைத்து மேடையில் ஏற்றி அவரது பயண வீடியோவை போட்டு காட்டினார் விஜய் சேதுபதி. அதன் பிறகு ஜாக்குலின் பற்றி விஜய் சேதுபதி பாராட்டி பேசினார்.

நீங்க அப்போவே ஹீரோ.. ஜாக்குலின் எலிமினேஷன் பற்றி விஜய் சேதுபதி பைனலில் சொன்ன கருத்து | Vijay Sethupathi Laud Jacquline Bigg Boss 8 Finale

நான் கூட செய்திருக்க மாட்டேன்.. விஜய் சேதுபதி

ஜாக்குலின் நீங்க பயத்தை ஜெயித்துவிட்டீங்க. கராத்தே கிட் படத்தின் பைனலில் பையன் ஹாஸ்பிடலில் இருப்பான், மருத்துவர்கள் சொல்வதை தாண்டி பயத்தை ஜெயித்துவிட வேண்டும் என நினைப்பான். அது போல பயத்தை ஜெயிக்க வேண்டும் என நினைத்தபோதே நீங்க ஹீரோ ஆகிட்டிங்க.

நான் அந்த வீட்டில் இருந்திருந்தால் கூட, நீங்க எடுத்த முடிவை எடுத்திருக்க மாட்டேன் எனவும் விஜய் சேதுபதி பாராட்டி இருக்கிறார்.

மேலும் ஜாக்குலின் பேசும்போது தான் 15 வாரங்களாக தொடர்ந்து நாமினேட் ஆனபோதும் மக்கள் எனக்காக ஓட்டு போட்டு காப்பாற்றினார்கள். அவர்களுக்காக நான் விளையாட வேண்டும் என முடிவெடுத்தேன், அதற்காக தான் ஓடினேன்  என கூறி இருக்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *