நாம் தொலைத்த குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்? கரூரில் சம்பவம் குறித்து பேசிய லதா ரஜினிகாந்த்

நாம் தொலைத்த குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்? கரூரில் சம்பவம் குறித்து பேசிய லதா ரஜினிகாந்த்


கரூர் சம்பவம்

கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாம் தொலைத்த குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்? கரூரில் சம்பவம் குறித்து பேசிய லதா ரஜினிகாந்த் | Latha Rajinikanth Talk About Karur Stampede

லதா ரஜினிகாந்த்



இதில் அவர் பேசுகையில்: 
“ஜனங்களே, பொதுமக்களே, என் அன்பான தமிழ் மக்களே, எங்கு கூட்டம் சேர்ந்தாலும் பாதுகாப்பை மட்டும் விட்டுவிடாதீர்கள். குழந்தைகள், பெண்களால் கடைசி நிமிடத்தில் ஓடமுடியாது. நெரிசல் ஏற்பட்டபின் அந்த இடத்திலிருந்து நாம் நகர்வது கடினமான விஷயம்.



நாம் தொலைத்த குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்? அவர்களுக்கு அந்த நிகழ்ச்சி பற்றி என்ன தெரியும்? அப்படிப்பட்டவர்கள் இன்று இல்லை என நினைக்கும்போது மனம் பதறுகிறது. இனியும் இப்படியொரு துயரம் நிகழாமல் இருக்க அரசு, பொதுமக்கள், காவல்துறை, நிகழ்ச்சி நடத்துவோர் என அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும்.

நாம் தொலைத்த குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்? கரூரில் சம்பவம் குறித்து பேசிய லதா ரஜினிகாந்த் | Latha Rajinikanth Talk About Karur Stampede

ஒரு நிகழ்ச்சி நடந்தால், அதில் நாம் எப்படி ஒற்றுமையோடும் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டும் என மக்கள் யோசிக்க வேண்டிய தருணம் இது. உயிர்நீத்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். உயிர்நீத்தவர்களை நினைத்து நினைத்து நம் மனம் தவிக்கத்தான் முடியும். இனி இப்படி நடந்து கொள்ளாமல் பார்த்துக்கொள்வது நம் கடமை” என பேசியுள்ளார்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *