நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண்.. ஆர்த்திக்கு கெனிஷா பதிலடி

நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண்.. ஆர்த்திக்கு கெனிஷா பதிலடி


நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோரது விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ரவி தனது புது கேர்ள் பிரென்ட் கெனிஷா உடன் ஜோடியாக வந்திருந்தார்.

அதை தொடர்ந்து ஆர்த்தி மற்றும் ரவி என இருவரும் மாறி மாறி பல குற்றச்சாட்டுகள் உடன் அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் விவாகரத்து தர ஜீவனாம்சமாக மாதம் 40 லட்சம் தர வேண்டும் என ஆர்த்தி கேட்டிருக்கிறார். அது சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பண விஷயத்தில் ரவி மோகன் சொன்ன குற்றச்சாட்டு உண்மை தான் போல என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண்.. ஆர்த்திக்கு கெனிஷா பதிலடி | I Come From Very Good Family Keneesha Ravi Mohan

கெனிஷா பதிவு

இந்நிலையில் கெனிஷா தற்போது இன்ஸ்டாவில் சில பதிவுகளை போட்டிருக்கிறார். ‘நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண்’ என அவர் பதிலடி கொடுத்து இருக்கிறார். ரவி தன்னை பிரிய மூன்றாவது ஒரு நபர் தான் காரணம் என ஆர்த்தி பதிவிட்ட நிலையில் இப்போது கெனிஷா பதில் அளித்து இருக்கிறார்.

நடந்ததற்கு நான் தான் காரணம் என உறுதியாக இருந்தால், என்னை நீதிமன்றத்திற்கு வர வையுங்கள். எனக்கு எதிராக வெறுப்பை மட்டுமே நீங்கள் மீடியாவில் பரப்பினால், தயவுசெய்து அதை நிறுத்துங்க. நான் ரொம்ப நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண்.


நீங்கள் எனக்கு கொடுக்கும் கமெண்டுகள், சாபம், கொலை மிரட்டல் போன்ற விஷயங்களால் என்ன நிலையில் இருக்கிறேன் என யாராவது யோசித்தீர்களா.

கர்மா பற்றி பேசி என்னை குறை சொல்கிறீர்கள். ஆனால் உண்மை வெளியில் வரும்போது உங்களுக்கு எல்லாம் என்ன நடக்கும் என நான் பார்க்க விரும்பவில்லை.

இவ்வாறு கெனிஷா பதிவிட்டு இருக்கிறார். மேலும் இந்த விஷயத்தில் கடவுளிடம் தான் சரணடைவதாக அவர் கூறியுள்ளார். 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *