நடுக்கடலில் இரண்டாகப் பிளந்த ரஷ்ய கப்பல்… கசியும் டன் கணக்கிலான எண்ணெய்

நடுக்கடலில் இரண்டாகப் பிளந்த ரஷ்ய கப்பல்… கசியும் டன் கணக்கிலான எண்ணெய்


ஆயிரக்கணக்கான டன் எண்ணெய் பொருட்களை ஏற்றிச் சென்ற ரஷ்ய எண்ணெய் டேங்கர் கடும் புயலில் சிக்கி இரண்டாகப் பிளந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

50 பேர்கள் கொண்ட மீட்பு


இதனால் அதில் இருந்த எண்ணெய் மொத்தம் தற்போது கடலில் கசிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கெர்ச் ஜலசந்தியில் இரண்டு ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் புயலில் சிக்கியதாகவே கூறப்படுகிறது.

நடுக்கடலில் இரண்டாகப் பிளந்த ரஷ்ய கப்பல்... கசியும் டன் கணக்கிலான எண்ணெய் | Russian Tankers Sink In Black Sea

mazut எனப்படும் 4,300 டன் எண்ணெய் இந்த இரு கப்பல்களிலும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவின் அவசர சேவையானது இழுவை படகுகள் மற்றும் மில் எம்ஐ-8 ஹெலிகொப்டரை உள்ளடக்கிய 50 பேர்கள் கொண்ட மீட்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

13 ஊழியர்கள் தற்போது கப்பலில் சிக்கிக்கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கசிந்துள்ள எண்ணெயின் அளவு அல்லது டேங்கர்களில் ஒன்று ஏன் இவ்வளவு கடுமையான சேதத்தை சந்தித்தது என்ற விவரங்களை உத்தியோகபூர்வ அறிக்கைகள் எதுவும் வழங்கவில்லை.

இதனிடையே, ரஷ்யாவின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே இந்த சிக்கலுக்கு காரணம் என உக்ரேனிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளர். மேலும் இந்த விவகாரம் தொடர்பில் உக்ரைன் கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்,

மூழ்கும் கப்பல்கள் இரண்டும் மிகவும் பழையவை என்றும், அத்தகைய புயலில் கடலுக்கு செல்வது ஆபத்தை வாங்குவது போன்றது என்றும் ரஷ்யர்கள் விதிகளை மீறியுள்ளனர், அதன் விளைவு விபத்தில் முடிந்துள்ளது என்றார்.

நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை

இதனிடையே, ஏற்கனவே போரினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கடல் சூழல், தற்போது எண்ணெய் பொருட்களும் கருங்கடலில் கொட்டினால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Volgoneft-212 கப்பலானது 55 ஆண்டுகள் பழமையானது. தற்போது புயலில் சிக்கி இரண்டாகப் பிளந்துள்ளது. பழுதடைந்த ரஷ்ய கப்பல்கள் சம்பந்தப்பட்ட விபத்து தெற்கு உக்ரைன் கடற்கரைக்கு அருகில் நடந்த சமீபத்திய கடல் பேரழிவாகும்.

நடுக்கடலில் இரண்டாகப் பிளந்த ரஷ்ய கப்பல்... கசியும் டன் கணக்கிலான எண்ணெய் | Russian Tankers Sink In Black Sea

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் கருங்கடல் பகுதியானது தீவிர இராணுவ மோதல் மண்டலமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையில் சிலவற்றை மூழ்கடிக்க உக்ரைன் கடல் ட்ரோன்கள் மற்றும் பிற ஏவுகணைகளைப் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *