நடிகைகளை ரசியுங்கள், விமர்சிக்காதீர்கள்… தவறாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்த திஷா பதானி..

திஷா பதானி
திஷா பதானி பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் திஷா பதானி. இவர் தமிழில் வெளிவந்த கங்குவா படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். எனினும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
நடிகை திஷா பதானி சமூக வலைத்தளத்தில் வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். படத்தின் மூலம் இவர் பிரபலமானதை விட, போட்டோஷூட் மூலம்தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.
விமர்சனங்களுக்கு பதிலடி
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை திஷா பதானி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிக்காக அவர் அணிந்திருந்த ஆடை குறித்து நெட்டிசன்கள் பலரும் தவறான கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தன்னுடைய ஆடை அலங்காரம் குறித்து வந்த தவறான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
இதில், “நடிகைகளை ரசியுங்கள், ஆனால் அவர்கள் அணியும் உடைகளை விமர்சிக்காதீர்கள். கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் இடையிலான வித்தியாசம் தெரியாமல் யாரும் திரையுலகிற்கு வரவில்லை” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.






