நடிகர் சிவகார்த்திகேயன் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா? அடேங்கப்பா

நடிகர் சிவகார்த்திகேயன் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா? அடேங்கப்பா


சிவகார்த்திகேயன்

தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, பின் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி இன்று முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன்.

மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், அதன்பின் மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், காக்கி சட்டை, ரஜினிமுருகன், டான், டாக்டர், அமரன் என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவானார்.

கடைசியாக இவர் நடிப்பில் பராசக்தி படம் வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் சேயோன் படம் உருவாகிறது. இப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்க, இயக்குநர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் First லுக் நேற்று மாலை வெளிவந்தது.

சொத்து மதிப்பு

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று 41வது பிறந்தநாள். ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 120 கோடி என கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *