நடிகர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது மிகவும் தவறு… பிரபல நடிகை

போதைப் பொருள்
சினிமா பிரபலங்கள் என்றாலே வியப்பாக பார்ப்பார்கள் ரசிகர்கள்.
சினிமா கலைஞர்களுக்கு நல்லது நடந்தால் எவ்வளவு பிரபலம் ஆகிறதோ அதைவிட ஏதாவது மோசமான விஷயம் நடந்தால் பெரிய அளவில் வைரலாகிவிடும்.
அப்படி சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைதாக நிறைய பேசப்பட்டது. அவர் கைதானதை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருள் வழக்கில் கைதானார், ஆனால் அவர் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்தது.
நடிகை பேட்டி
அண்மையில் பிரபலமான அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த நடிகை அம்பிகா சாமி தரிசனம் செய்துவிட்டு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் போதைப்பொருள் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், போதை பொருள் உயிரை கெடுக்கும். நடிகர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதை பார்த்து மற்றவர்கள் அதனை பயன்படுத்துவார்கள். அதனால் நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்துவது மிகவும் தவறான விஷயம் என்றார்.