நடத்தையில் சந்தேகம்; எல்லைமீறிய மனைவி – கதறும் குழந்தைகள்!

நடத்தையில் சந்தேகம்; எல்லைமீறிய மனைவி – கதறும் குழந்தைகள்!

இன்ஸ்டாவால் மனைவியை, கணவன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டா மோகம்

உத்தரப்பிரதேசம், லக்வாயா கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி சீமா. இவர்களுக்கு வன்ஷிகா(10), அன்ஷிகா(6), பிரியான்ஷ்(3) என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

உயிரிழந்த சீமா

இந்நிலையில் கடந்த சில காலமாக கருத்துவேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. சீமாவுக்கு ரீல்ஸ் பதிவிடுவதில் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. எனவே, தனது இன்ஸ்டா பக்கத்தில் பலவிதமான ரீல்ஸ்களை செய்து பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து ரீல்ஸ்களுக்கு பல்வேறு ஆதரவு கருத்துக்கள் கிடைத்துள்ளன. மேலும், அவருக்கு தெரியாத எண்ணில் இருந்து ஃபோன் கால்கள் வந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் வெடித்துள்ளது. இருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜூ, சீமாவை செங்கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

கணவன் வெறிச்செயல்

இதற்கிடையில் இவர்களது குழந்தைகள் இதனை பார்த்துக்கொண்டிருந்ததால், அவர்களை ராஜூ கட்டாயப்படுத்தி தூங்க வைத்துள்ளார். அதன்பின் , சீமாவை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

நடத்தையில் சந்தேகம்; எல்லைமீறிய மனைவி - கதறும் குழந்தைகள்! | Husband Killed Wife For Instagram Reels Up

ஆனால் தூங்காமல் இருந்த குழந்தைகள் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், தன்னுடைய செல்போனையும்,

மனைவியின் செல்போனையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்துள்ளனர். தப்பிச்சென்ற ராஜுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.   



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *