துப்பாக்கி முனையில் ஆசிரியரை கடத்தி திருமணம் – வைரலாகும் வீடியோ

துப்பாக்கி முனையில் ஆசிரியரை கடத்தி திருமணம் – வைரலாகும் வீடியோ


துப்பாக்கி முனையில் ஆசிரியரை கடத்தி திருமணம் செய்து வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


4 வருட காதல்



பீகார் மாநிலம் பெகுர்சராய் மாவட்டத்தில் உள்ள ராஜௌராவைச் சேர்ந்த சுதாகர் ராயின் மகன் அவ்னிஷ் குமார். சமீபத்தில் பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவ்னிஷ் குமார் அங்கு உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். 

bihar teacher pakadwa vivah



இந்நிலையில் கடந்த 4 வருடங்களாக இவரும், குஞ்சன் என்ற பெண்ணும் காதலித்து வந்தாகவும் ஆனால் திருமணத்திற்கு அவ்னிஷ் குமார் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. 



கடத்தல்



இந்நிலையில் நேற்று(13.12.2024) அவ்னிஷ் குமார் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது இரு கார்களில் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

அதன் பின்னர் அவரை கடத்தியது குஞ்சனின் உறவினர்கள் என தெரிய வந்துள்ளது. 

அவர்கள் அவ்னிஷ் குமாரை கட்டாயப்படுத்தி குஞ்சனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் இந்த திருமணத்திற்கு பின்னர் அவ்னிஷ் குமார் தப்பி ஓடி விட்டார்.



பக்வாடா திருமணம்



அதன் பின்னர் குஞ்சன், அவ்னிஷ் குமாரின் வீட்டிற்கு சென்ற போது, அவரை அவ்னிஷ் குமாரின் பெற்றோர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இது தொடர்பாக குஞ்சன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

bihar teacher pakadwa vivah

இது தொடர்பாக அவ்னிஷ் குமாரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், நான் குஞ்சனை காதலிக்கவில்லை என்றும், அவள்தான் என்னைப் பின்தொடர்ந்து வந்து பிரச்சனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஆண்களை மிரட்டி திருமணம் செய்யும் பக்வாடா திருமணங்கள் திருமணங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் இவ்வாறு 30க்கும் மேற்பட்ட பக்வாடா திருமணங்கள் பீகாரில் நடைபெற்றுள்ளது.   




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *