துபாயில் பிரபலத்துடன் கொண்டாட்டத்தில் ஆர்த்தி ரவி…

ஆர்த்தி ரவி
ஆர்த்தி ரவி, சினிமாவில் இல்லை என்றாலும் கடந்த சில வருடங்களாக இவர் பெயர் அதிகம் அடிபடுகிறது.
ஹேட்டர்ஸ் இல்லா நடிகராக வலம் வந்த ஜெயம் ரவியின் மனைவி என்ற அடையாளத்துடன் வலம்வந்த ஆர்த்தி இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கக் கூடியவர்.
ஆனால் கடந்த வருடம் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூற பெரிய விவாதமாக மாறியது.
சமூக வலைதளங்களில் இருவரும் மாறி மாறி கருத்து வெளியிட்டு சண்டை போட வழக்கும் நடந்து வந்தது. பின் நீதிமன்றம் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என கூறியதால் பரபரப்பு அடங்கியது.
கொண்டாட்டம்
தற்போது ஆர்த்தி ரவியின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அதாவது ஆர்த்தி ரவி துபாய்க்கு தனது மகன்களுடன் சென்று தீபாவளியை கொண்டாடியுள்ளார்.
அங்கு அவர் பிரபல நடிகை குஷ்புவின் குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்கள் தான் வைரலாகிறது. இதோ போட்டோஸ்,