திருமணத்தை அறிவித்த ராஷ்மிகா.. உருக்கமாக போட்ட பதிவு இதோ
நடிகை ராஷ்மிகா அவரது காதலர் விஜய் தேவரகொண்டாவை இன்னும் சில தினங்களில் கரம் பிடிக்க இருக்கிறார். பல வருட காதலுக்கு பிறகு ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் பிப்ரவரி 26ம் தேதி திருமணம் செய்ய இருக்கின்றனர்.
மிக மிக நெருக்கமானவர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. மார்ச் 4ம் தேதி நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சினிமா துறையினர் மற்றும் நட்சித்திரங்கள் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ராஷ்மிகா அறிவிப்பு
இந்நிலையில் திருமணம் பற்றிய அறிவிப்பை முதல் முறையாக ராஷ்மிகா வெளியிட்டுள்ளார்.
தங்கள் ஜோடியை Virosh என ரசிகர்கள் அழைத்து வருவதால், அதை கௌரவப்படுத்தும் விதமாக திருமணத்திற்கு ‘The wedding of VIROSH’ என அழைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.






