திருப்பத்தூரில் இருக்கும் சிறந்த தியேட்டர்கள் லிஸ்ட்

சில வருடங்களுக்கு முன்பு தான் வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. புது மாவட்டமாக இருக்கும் திருப்பத்தூரில் இருக்கும் முக்கிய தியேட்டர்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.
ஸ்ரீராமஜெயம்
4K Dolby Atmos உடன் இருக்கும் ஸ்ரீராமஜெயம் திருப்பத்தூரின் முக்கிய தியேட்டர்களில் ஒன்றாகும்.
திருப்பத்தூர் நகரத்தின் நடுவில் அமைந்து இருக்கும் இந்த தியேட்டர் அனைத்து வசதிகளும் கொண்டிருப்பதாக சினிமா ரசிகர்கள் கூறி இருக்கின்றனர்.
ஸ்ரீ CKC சினிமாஸ்
சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்த தியேட்டர் 4k dts வசதி உடன் தற்போது இருக்கிறது.
திருப்பத்தூரில் சினிமா ரசிகர்கள் தற்போது தேடி செல்லும் முக்கிய தியேட்டர்களில் ஒன்றாக இது மாறி வருகிறது.
திருமகள் தியேட்டர்
திருப்பத்தூரில் காமராஜ் நகர் மெயின் ரோட்டில் திருமகள் தியேட்டர் அமைந்து இருக்கிறது.
திருமகள் மற்றும் கலைமகள் என இரண்டு ஸ்கிறீன்கள் இந்த தியேட்டரில் இடம்பெற்று இருக்கிறது.