தமிழ் ரசிகர்களை கவர்ந்த சஸ்பென்ஸ் படங்கள்.. ஸ்பெஷல் தொகுப்பு

தமிழ் ரசிகர்களை கவர்ந்த சஸ்பென்ஸ் படங்கள்.. ஸ்பெஷல் தொகுப்பு


காதல் படங்களுக்கு இருப்பது போலவே சஸ்பென்ஸ் படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அப்படி தற்போதைய இளம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்த mystery/suspense படங்களை பற்றி பார்க்கலாம்.

விக்ரம் வேதா

போலீஸ் விக்ரம், ரவுடி வேதா.. இவர்கள் இருவருக்கும் நடுவில் நடக்கும் மோதல். வேதா எதற்காக போலீஸ் மீது வெறியில் இருக்கிறார் என ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரையே சஸ்பென்ஸ் ஆக கதையை நகர்த்தி இருப்பார்கள் இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி.

தமிழ் ரசிகர்களை கவர்ந்த சஸ்பென்ஸ் படங்கள்.. ஸ்பெஷல் தொகுப்பு | Best Mystery Movies In Tamil

ராட்சசன்

தொடர்ந்து பள்ளி மாணவிகளை கடத்தி கொலை செய்து வரும் சைக்கோ கில்லர் பற்றிய படம் தான் ராட்சசன். விஷ்ணு விஷால் ஹீரோ சப் இன்ஸ்பெக்டராக நடித்து இருப்பார்.

ஹீரோவின் குடும்பத்திலேயே ஒரு பெண் குழந்தை காணாமல் போக, அவர் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடித்தாரா என்பதை சுவாரஸ்யமாக காட்டி இருப்பார் இயக்குனர் ராம் குமார்.

பாபநாசம்

மலையாளத்தில் மெகா ஹிட் ஆன திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். கமல்ஹாசன், கௌதமி, கலாபவன் மணி உள்ளிட்ட பலர் இதில் நடித்து இருந்தனர்.

மகளிடம் தவறாக நடந்தவனை கௌதமி கொலை செய்துவிட, கமல்ஹாசன் எப்படி போலீஸிடம் சிக்காமல் கடைசி வரை குடும்பத்தை தப்பிக்க வைத்தார் என்பது தான் இந்த படத்தின் கதை.
 

உடல் எங்கே என்பது தான் படத்தின் இறுதி வரை சஸ்பென்ஸ் ஆக இருக்கும்.

தமிழ் ரசிகர்களை கவர்ந்த சஸ்பென்ஸ் படங்கள்.. ஸ்பெஷல் தொகுப்பு | Best Mystery Movies In Tamil

துருவங்கள் 16

இயக்குனர் கார்த்திக் நரேனின் முதல் படம் இது. அந்த படம் இயக்கும்போது அவருக்கு 22 வயது தான் என்பது பெரிய அளவில் பேசப்பட்ட ஒன்று.

முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஹ்மானை சந்திக்க வரும் இளைஞர் ஒருவரிடம் தான் சந்தித்த ஒரு வழக்கை பற்றி சொல்கிறார். அந்த கொலை வழக்கு தனது வாழ்க்கையையே எப்படி திருப்பி போட்டது என்பதை அவர் கூறும் பிளாஷ்பேக் காட்சிகள் தான் படத்தின் பெரிய பகுதி.


படம் பார்பவர்களை சீட்டின் நுனியிலேயே வைத்திருந்த படம் இது.

தமிழ் ரசிகர்களை கவர்ந்த சஸ்பென்ஸ் படங்கள்.. ஸ்பெஷல் தொகுப்பு | Best Mystery Movies In Tamil

பீட்சா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்த இந்த படம் 2012ல் ரிலீஸ் ஆகி இருந்தது. டிவி ஷோ மூலமாக பிரபலம் ஆன கார்த்திக் சுப்புராஜ்க்கு இது முதல் திரைப்படம் ஆகும்.

விஜய் சேதுபதி சொல்லும் பேய் கதை உண்மையா பொய்யா என கடைசி வரை சஸ்பென்ஸ் ஆகவே படம் செல்லும்.
 

தமிழ் ரசிகர்களை கவர்ந்த சஸ்பென்ஸ் படங்கள்.. ஸ்பெஷல் தொகுப்பு | Best Mystery Movies In Tamil


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *