தமிழ் சினிமாவில் 2011ல் வெளிவந்த சிறந்த படங்கள்

தமிழ் சினிமாவில் 2011ல் வெளிவந்த சிறந்த படங்கள்


2011ல் வெளிவந்த சிறந்த படங்களின் பட்டியலை பார்க்கலாம் வாங்க.

ஆடுகளம்

வெற்றிமாறனின் இரண்டாவது படம் இது. பொல்லாதவன் படத்திற்கு பிறகு தனுஷ்- வெற்றிமாறண் கூட்டணியிலும் இது இரண்டாவது படம்.

பொல்லாதவன் வந்து மூன்று வருடங்களுக்கு பிறகு தான் இந்த படம் வெற்றிமாறனுக்கு கிடைத்தது. சேவல் சண்டையையும், அதை மையப்படுத்தி ஏற்படும் பகையையும் பற்றிய இந்த படம் 6 தேசிய விருதுகளையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

2011 பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன இந்த படம் போட்டிக்கு வந்த விஜய்யின் காவலன் படத்தை விட நல்ல வரவேற்பு பெற்றது.

தமிழ் சினிமாவில் 2011ல் வெளிவந்த சிறந்த படங்கள் | 2011 Best Tamil Movies

கோ

ஜீவா நடிப்பில் மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவான இந்த படம் 2011 ஏப்ரல் 22ம் தேதி ரிலீஸ் ஆனது.

புகைப்பட கலைஞராக ஜீவா, பத்திரிகையாளராக கார்த்திகா நாயர், அடிக்கடி அடால்டாக பேசும் பியா பாஜ்பாய் என இளமை துள்ளலுடன் அனைவரும் நடித்து இருப்பார்கள்.

வழக்கமான அரசியல்வாதி vs பத்திரிகையாளர் கதை தான் என்றாலும் நிஜமான வில்லன் யார் என்பதே கிளைமாக்ஸில் தான் தெரியவரும் என்பது தான் அனைவருக்கும் காத்திருந்த ஆச்சர்யம்.

யுத்தம் செய்

மிஷ்கின் இயக்கிய இந்த படம் 2011 பிப்ரவரி 3ம் தேதி ரிலீஸ் ஆனது. சேரன் அதில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்து இருப்பார்.

நகரத்தில் திடீரென பலர் காணாமல் போகின்றனர். அதை பற்றி துப்பு துலக்க சேரன் நியமிக்கப்படுகிறார். அவரது தங்கையும் காணாமல் போயிருப்பதால் அவர் தீவிரமாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதை அவர் எப்படி செய்தார் என்பது தான் இந்த யுத்தம் செய்.

தமிழ் சினிமாவில் 2011ல் வெளிவந்த சிறந்த படங்கள் | 2011 Best Tamil Movies

தெய்வத் திருமகள்

விக்ரம், பேபி சாரா, அனுஷ்கா, சந்தானம், அமலா பால் உள்ளிட்டோர் நடிப்பில் 2011 ஜூலை 15ல் ரிலீஸ் ஆன படம் இது.

மன வளர்ச்சி குறைபாடுடைய கிருஷ்ணா (விக்ரம்) அவரது காதல் மனைவி மூலமாக பிறகும் பெண் குழந்தை நிலாவுக்காக நடத்தும் பாச போராட்டம் தான் இந்த ‘தெய்வத் திருமகள்’.

தமிழ் சினிமாவில் 2011ல் வெளிவந்த சிறந்த படங்கள் | 2011 Best Tamil Movies

மங்காத்தா

அஜித் ரசிகர்கள் எல்லோரும் தற்போதும் கொண்டாடும் படமாக இருந்து வருகிறது மங்காத்தா. நானும் எவ்வளவு நாளுக்கு தான் நல்லவனாவே நடிக்கிறது என கூறி அஜித்தை கெட்டவனாக நடிக்க வைத்து இருப்பார் வெங்கட் பிரபு.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் ட்ரெண்டையும் இதன் மூலமாக உருவாக்கிவிட்டார் என்றும் சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் 2011ல் வெளிவந்த சிறந்த படங்கள் | 2011 Best Tamil Movies

7ஆம் அறிவு

முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் இதில் நடித்து இருந்தனர். அக்டோபர் 25, 2011ல் இந்த படம் வெளிவந்தது.

போதி தர்மரின் கதையை சொல்ல ப்ளாஷ்பேக், மீண்டும் அவரது DNAவை கொண்டு வருகிறோம் என காட்டப்படும் விஷயங்கள், அது நடந்ததா இல்லையா என்பது தான் இந்த படத்தின் கதை.
 

தமிழ் சினிமாவில் 2011ல் வெளிவந்த சிறந்த படங்கள் | 2011 Best Tamil Movies


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *