தமிழ்நாடு இருக்கட்டும், கேரளாவில் புக்கிங்கில் செம கலெக்ஷன் செய்துள்ள ரஜினியின் கூலி.. இத்தனை கோடி வசூலா?

கூலி படம்
ஆகஸ்ட் 14, தமிழ்நாடே இன்று கொண்டாட்டத்தின் உச்சமாக உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது, ஆகஸ்ட் 15, 16 மற்றும் 17 தேதிகள் தொடர் விடுமுறை என்பதால் ரிலீஸ்.
ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், உபேந்திரா, நாகர்ஜுனா, சௌபின் ஷாகிர், காளி வெங்கட், ஸ்ருதிஹாசன் என ஏராளமானோர் நடித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய மாற்றம் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கேரளா
சூப்பர் ஸ்டார் ரஜினி ஆச்சே, ஆள் ஏரியாவிலும் இவர் கில்லி என்பது அனைவருக்குமே தெரியும்.
70% ப்ரீ புக்கிங் தாறுமாறாக நடக்க மொத்தமாக ரூ. 8 கோடி வரை கலெக்ஷன் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. இது மாஸான புக்கிங் என கொண்டாடப்படுகிறது.
படமும் இன்று வெளியாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.