தனுஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு.. நயன்தாரா, நெட்ப்ளிக்ஸ் எதிராக நீதிமன்றம் அதிரடி

தனுஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு.. நயன்தாரா, நெட்ப்ளிக்ஸ் எதிராக நீதிமன்றம் அதிரடி


நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே இருக்கும் பிரச்சனை எல்லோருக்கும் தெரிந்தது தான். தன் திருமண ஆல்பம் வீடியோவில் நானும் ரௌடி தான் பட காட்சிகளை பயன்படுத்த NOC பலமுறை கேட்டும் அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தரவில்லை என நயன் புகார் கூறினார்.

தனுஷ் அனுமதி வாங்காமலேயே அந்த வீடியோ நெட்பிலிக்ஸ் தளத்தில் கடந்த வருடம் வெளியானது. அதற்கு எதிராக தனுஷ் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அதில் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டிருக்கிறார் அவர்.

இதற்கு எதிராக நெட்பிலிக்ஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த ஆவணப்படம் பற்றி வழக்கு தொடுக்க முடியாது என நெட்ப்ளிக்ஸ் வாதிட்டது.

தனுஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு.. நயன்தாரா, நெட்ப்ளிக்ஸ் எதிராக நீதிமன்றம் அதிரடி | Dhanush Nayanthara Case Netflix Petition Rejected

நிராகரிப்பு

நெட்பிலிக்ஸ் தரப்பு போட்ட மனுவின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில் சென்னையில் வழக்கு தொடர முடியாது என நெட்பிலிக்ஸ் தரப்பின் மனுவை நீதிபதி நிராகரித்தார்.

மேலும் தனுஷ் தொடர்ந்த உரிமையியல் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ம் தேதி விசாரணைக்காக பட்டியலிட நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார்.
 

தனுஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு.. நயன்தாரா, நெட்ப்ளிக்ஸ் எதிராக நீதிமன்றம் அதிரடி | Dhanush Nayanthara Case Netflix Petition Rejected


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *