டூரிஸ்ட் பேமிலி படத்தின் இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டூரிஸ்ட் பேமிலி
சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாபெரும் வெற்றியைந்த திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்க மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரித்து இருந்தனர்.
சிம்ரன் இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து முதல் முறையாக நடித்திருந்தார். மேலும் எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், கமலேஷ், இளங்கோ குமரவேல் என பலரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியிருந்தனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, நடிகர் சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தை பார்த்துவிட்டு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
இந்த நிலையில், டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான வசூல் என்னவென்று, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அறிவித்துள்ளது. அதன்படி, மக்களின் பேரன்பினால் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் உலகளவில் ரூ. 75 கோடி வசூல் செய்துள்ளது என அறிவித்துள்ளனர்.
இதன்மூலம் 2025ம் ஆண்டு வெளிவந்து அதிக லாபத்தை கொடுத்த படங்களின் பட்டியலில் இப்படம் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#TouristFamily Hits 75+ CRORES WORLDWIDE GROSS 💥💥
Overwhelmed with love ❤️
Thank you for making our wholesome family entertainer a worldwide success.Written & directed by @abishanjeevinth ✨
A @RSeanRoldan musical 🎶@sasikumardir @SimranbaggaOffc @Foxy_here03… pic.twitter.com/D8IT1vIL31— Million Dollar Studios (@MillionOffl) May 23, 2025