ஜேர்மனியில் 1000 கிலோ எடையுள்ள இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

ஜேர்மனியில் 1000 கிலோ எடையுள்ள இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு


ஜேர்மன் நகரமொன்றில் 1000 கிலோ எடையுள்ள இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3,000 பொதுமக்கள் வெளியேற கோரிக்கை

ஜேர்மன் நகரமான கொலோனில் 1000 கிலோ எடையுள்ள இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 3,000 பொதுமக்களை தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

செவ்வாயன்று மாலை Sülz என்னுமிடத்தில் கட்டிட வேலைக்காக பள்ளம் தோண்டும்போது இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

கொலோன் நகரில் இப்படி இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறையல்ல.

1942ஆம் ஆண்டு, பிரித்தானிய விமானப்படைகள் ஜேர்மனி மீது குண்டுவீசியபோது, முதலில் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று கொலோன் ஆகும்.

அப்போது வீசப்பட்ட குண்டுகளில், வெடிக்காத பல குண்டுகள் கட்டுமானப்பணிக்காக பள்ளம் தோண்டும்போது அவ்வப்போது கிடைப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *