ஜெயிலர் 2 கெஸ்ட் ரோலில் முன்னணி தமிழ் ஹீரோ.. யாரும் எதிர்பார்க்காத ஒருவர்
சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் இரண்டாம் பாகத்தின் கதை எப்படி இருக்கும் என பல தகவல்களும் உலா வருகிறது.
இந்த படத்திலும் பல முன்னணி நடிகர்கள் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றனர். ஹிந்தி நடிகர் ஷாருக் கான் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் இருந்து முன்னணி நடிகர்கள் பலரும் கெஸ்ட் ரோலில் நடித்து உள்ளனர்.
விஜய் சேதுபதி
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தற்போது அளித்த பேட்டியில் தான் ஜெயிலர் 2ல் கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
“எனக்கு ரஜினி சாரை பிடிக்கும், அதனால் தான் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறேன். அவருடன் இருக்கும்போது பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்” என விஜய் சேதுபதி தெரிவித்து இருக்கிறார்.






