ஜீ தமிழில் மேலும் முடிவுக்கு வரும் ஒரு சீரியல்… தொடர்ந்து 4 சீரியல்களா?

ஜீ தமிழ்
ஜீ தமிழ், அடுத்து இந்த தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
வேறுஎன்ன, ஜீ தமிழ் குடும்ப விருதுகள் தான், நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது, இன்னும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை.
பிடித்த சீரியல், நடிகர்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்திற்கும் விருது கொடுக்கப்படும்.
ரசிகர்கள் விருது விழா நினைத்து சந்தோஷத்தில் இருந்தால் அடுத்தடுத்து ஷாக்கிங் தகவல்கள் வருகின்றன.
கிளைமேக்ஸ்
அதாவது ஜீ தமிழில் 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பான நினைத்தாலே இனிக்கும் சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது, சமீபத்தில் கிளைமேக்ஸ் படப்பிடிப்பும் நடந்தது.
இந்த தகவல் ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்க சமீபத்தில் புதியதாக தொடங்கப்பட்ட கெட்டி மேளம், மாரி தொடர்களும் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்தது.
ஆனால் இதுவரை உறுதியான தகவல் எதுவும் வரவில்லை.
இந்த நிலையில் தான் வேறொரு சீரியல் முடிவு குறித்த தகவல் வந்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய சீரியல் மௌனம் பேசியதே.
300 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி இருக்கும் இந்த சீரியலின் கிளைமேக்ஸ் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு என்னடா அடுத்தடுத்து சீரியல்கள் முடிகிறது என ஷாக்காக உள்ளது.