ஜீ தமிழின் வாரிசு சீரியல் எப்போது ஒளிபரப்பாக தொடங்குகிறது… நேரத்துடன் வந்த விவரம்

வாரிசு சீரியல்
வாரிசு என்றவுடன் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் தான் முதலில் நியாபகம் வரும்.
ஆனால் நாம் இங்கு பார்க்கப்போவது வாரிசு சீரியல் குறித்த தகவல்.
அதாவது நாளுக்கு நாள் புத்தம் புதிய சீரியல்களையும், சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பும் ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் குறித்த தகவல் தான் வந்துள்ளது.
ஜெய் எஸ்கே மற்றும் ஸ்வேதா இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ள இந்த தொடரின் புரொமோ 10 நாட்களுக்கு முன்பே வெளியாகிவிட்டது.
வரும் ஜுன் 30ம் தேதி முதல் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.
இதனால் சில தொடர்களின் நேரம் மாற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.