ஜீ தமிழின் மௌனம் பேசியதே சீரியலின் புதிய நாயகி…ஜோவிதாவிற்கு பதில் இவர்தானா?

ஜீ தமிழின் மௌனம் பேசியதே சீரியலின் புதிய நாயகி…ஜோவிதாவிற்கு பதில் இவர்தானா?


மௌனம் பேசியதே

ஜீ தமிழில் தொடர்ந்து நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. கார்த்திகை தீபம், அண்ணா போன்ற தொடர்கள் எல்லாம் டிஆர்பியில் முன்னேறி வருகிறது.

கொஞ்சம் டல் அடிக்கும் தொடர்களை முடிவுக்கு கொண்டு வந்து உடனே புதிய சீரியல்களை தொடங்கிவிடுகிறார்கள்.

அப்படி சமீபத்தில் தொடங்கப்பட்ட தொடர் தான் மௌனம் பேசியதே. கோழிக்கூவுது, காதல்சொல்ல ஆசை, விழித்தெழு போன்ற பல படங்களில் நடித்துள்ள அசோக் குமார் இந்த சீரியலின் நாயகனாக நடித்துள்ளார்.

ஜீ தமிழின் மௌனம் பேசியதே சீரியலின் புதிய நாயகி...ஜோவிதாவிற்கு பதில் இவர்தானா? | Mounam Pesiyadhe Serial New Heroine

நாயகி மாற்றம்

இந்த சீரியலில் நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா நடிக்க கமிட்டானார். சன் டிவியின் அருவி சீரியலில் நடித்தவர் அந்த தொடருக்கு பின் மௌனம் பேசியதே சீரியலில் கமிட்டானார்.

சில எபிசோடுகள் நடித்த ஜோவிதா தற்போது தொடரில் இருந்து விலகிவிட்டார், அதற்கு சில காரணங்களையும் அவர் கூறியிருந்தார்.

தற்போது அவர் மௌனம் பேசியதே சீரியலில் நடித்துவந்த துளசி கதாபாத்திரத்தில் இனி பௌஸி நடிக்க இருக்கிறாராம். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *