ஜீ தமிழின் அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நாயகி.. யார் தெரியுமா?

அண்ணா சீரியல்
ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று அண்ணா சீரியல்.
திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஷண்முகம் என்ற கதாபாத்திரத்தில் மிர்ச்சி செந்தில் நடிக்க அருக்கு ஜோடியாக நித்யா ராம் நடித்து வருகிறார்.
விறுவிறுப்பின் உச்சமாக நாளுக்கு நாள் இந்த தொடரின் கதைக்களம் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது.
புதிய நாயகி
தற்போது இந்த சீரியலில் புதிய நாயகி என்ட்ரி கொடுக்க உள்ளாராம். சத்யா சீரியல் புகழ் ரம்யா அண்ணா சீரியலில் களமிறங்க உள்ளாராம்.
ஆனால் அவருக்கு என்ன கதாபாத்திரம், யாருடைய ஜோடி என்று எந்த தகவலும் தெரியவில்லை.