ஜனநாயகன் படம் குறித்து விஜய் எடுத்த அதிர்ச்சி முடிவு.. கடும் வருத்தத்தில் ரசிகர்கள்

ஜனநாயகன் படம் குறித்து விஜய் எடுத்த அதிர்ச்சி முடிவு.. கடும் வருத்தத்தில் ரசிகர்கள்


ஜனநாயகன்

நடிகர் விஜய் தற்போது அரசியலில் முழுமையாக இறங்கியுள்ள காரணத்தினால், சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என்றும் அறிவித்துவிட்டார்.

ஜனநாயகன் படம் குறித்து விஜய் எடுத்த அதிர்ச்சி முடிவு.. கடும் வருத்தத்தில் ரசிகர்கள் | Vijay S Shocking Decision Regarding Film Janyayan

இதன்பின் முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே என விஜய் எடுத்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை தந்தது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், இன்னும் பேட்ச் ஒர்க் மட்டுமே மீதமுள்ளது என கூறப்படுகிறது.

விஜய் எடுத்த முடிவு

இந்த நிலையில், இப்படம் குறித்து விஜய் எடுத்துள்ள அதிரடி முடிவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் பிறந்தநாளில் எப்போதும் அவருடைய படம் குறித்து அறிவிப்பு வெளிவரும். அதற்காக விஜய்யின் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

ஆனால், வருகிற ஜூன் 22ம் தேதி தனது பிறந்தநாள் அன்று தனது படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவர கூடாது என விஜய் முடிவு செய்துள்ளாராம். மேலும் படப்பிடிப்பின் இறுதி நாளில் எடுத்த புகைப்படங்கள் கூட இப்போது வெளிவரக்கூடாது என கூறிவிட்டாராம்.

ஜனநாயகன் படம் குறித்து விஜய் எடுத்த அதிர்ச்சி முடிவு.. கடும் வருத்தத்தில் ரசிகர்கள் | Vijay S Shocking Decision Regarding Film Janyayan

படத்தின் ரிலீஸுக்கு ஒரு மாதத்திற்கு முன் அப்டேட் ஒவ்வொன்றாக வெளிவந்தால் போதும் என அவர் முடிவு செய்துள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.

காரணம், தனது ரசிகர்களும் தொண்டர்களும் அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் கவனம் திசைமாறக்கூடாது என்பதற்காகவும் தான் இந்த முடிவை விஜய் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *