சூர்யாவின் கருப்பு முழு படத்தை பார்த்த தயாரிப்பாளர்.. சொன்ன முதல் விமர்சனம்

சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த வருட தீபாவளிக்கு தான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருந்தனர். ஆனால் அதன் பின் தள்ளிப்போனது. தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது எனவும், முழு படத்தை பார்க்கும்போது தனக்கு அது பிடித்து இருந்தது என ஆர்ஜே பாலாஜி கூறி இருகிறார்.
மேலும் படத்தை பார்த்த தயாரிப்பாளர் என்ன சொன்னார் எனவும் பாலாஜி பேசி இருக்கிறார்.
தயாரிப்பாளர் விமர்சனம்
“இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, SR பிரகாஷ் ஆகியோர் ப்ளூ சட்டை மாறனை விட பயங்கரமா பாப்பாங்க. அவங்களே படத்தை பார்த்துவிட்டு ‘ஹா..நிம்மதியா இருக்கு’ என சொன்னாங்க.
டீசருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். டீஸர் போல தான் படமும் இருக்கும் என RJ பாலாஜி கூறி இருக்கிறார்.