சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல.., கோயில் விவகாரத்தில் இளையராஜா விளக்கம்

சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல.., கோயில் விவகாரத்தில் இளையராஜா விளக்கம்


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறை விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா விளக்கம் அளித்துள்ளார்.



இளையராஜா விளக்கம்



ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் சென்ற போது இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.



ஆனால், கோயில் நிர்வாகம் தரப்பில் மரியாதை செலுத்துவதற்காக மட்டுமே இளையராஜாவை தடுத்து நிறுத்தப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இளையராஜா விளக்கம் அளித்துள்ளார்.

சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல.., கோயில் விவகாரத்தில் இளையராஜா விளக்கம் | Ilayaraja S Explanation On The Temple Issue



அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை.

நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *